Friday, January 13, 2017

PONGAL

பண்டிகை என்றால் ஆனந்தம்
பொங்கும் இன்பம் சந்தோஷம்
உள்ளம் எல்லாம் உற்சாகம்
குலவி வாழ்ந்து பழக சந்தர்ப்பம்

தமிழன் குலப் பெருமை
தரணியெங்கும் பரவும் திருநாள்
தைத் திங்கள் பிறந்தவுடன்
தரிசு கூட தழைத்தோங்கிய தமிழ்நாடு

விரிந்து கிடந்த விவசாயம்
விஸ்தாரமான விளை நிலங்கள்
எல்லாம் மெல்ல மெல்ல குறைந்து
வீட்டுக்குள்ளே  முடிகின்றது

பண்டிகை பாரம்பரியம் மாறி
விடுப்புக்கு வழி என்றானது
கலாச்சாரமாக இருந்த பொங்கல்
இப்போது கடமைக்கு பொங்குகிறது

உயிரோடு கலந்த உறவாய் நிலத்தை மதித்து
பயிரோடு சேர்ந்து பழகி விளைவித்து
தன் நிலை நிறைக்காமல் நம் வயிறு நிறைக்கும்
நமது விவசாயிகள் தான் இன்று நம் தெய்வங்கள்

அவர்களும் அவர்கள் பயிர்களும்
என்றும் வாடாது வளம் கொழிக்க
விவசாயமும் இயற்க்கை வளமும் செழித்து
வளமான வாழ்க்கைக்கும் வாழ்த்தி வணங்குவோம்


இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!

                                               - சிவா

1 comment: