பண்டிகை
என்றால் ஆனந்தம்
பொங்கும்
இன்பம் சந்தோஷம்
உள்ளம்
எல்லாம் உற்சாகம்
குலவி வாழ்ந்து பழக சந்தர்ப்பம்
தமிழன்
குலப் பெருமை
தரணியெங்கும்
பரவும் திருநாள்
தைத் திங்கள் பிறந்தவுடன்
தரிசு கூட தழைத்தோங்கிய தமிழ்நாடு
விரிந்து
கிடந்த விவசாயம்
விஸ்தாரமான
விளை நிலங்கள்
எல்லாம்
மெல்ல மெல்ல குறைந்து
வீட்டுக்குள்ளே முடிகின்றது
பண்டிகை
பாரம்பரியம் மாறி
விடுப்புக்கு
வழி என்றானது
கலாச்சாரமாக
இருந்த பொங்கல்
இப்போது
கடமைக்கு பொங்குகிறது
உயிரோடு
கலந்த உறவாய் நிலத்தை மதித்து
பயிரோடு
சேர்ந்து பழகி விளைவித்து
தன் நிலை நிறைக்காமல் நம்
வயிறு நிறைக்கும்
நமது விவசாயிகள் தான் இன்று நம்
தெய்வங்கள்
அவர்களும்
அவர்கள் பயிர்களும்
என்றும்
வாடாது வளம் கொழிக்க
விவசாயமும்
இயற்க்கை வளமும் செழித்து
வளமான வாழ்க்கைக்கும் வாழ்த்தி வணங்குவோம்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!
- சிவா